Thursday, 16 January 2020

RCE - The Right Club for Education

RCE - The Right Club for Education
India's First and Best 5 Rupees Mini School
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்! இந்தியனின் கடமை கல்வி கற்பது! இந்தியனின் பொறுப்பு கல்வியை கற்பிப்பது!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி!
    ஒருநாள் திருவிழாவிற்காக உறங்காமல் உழைக்கும் உன்னதமான ஊர்தான் சிவகாசி! தமிழகத்தை புரட்டிப்போட்ட கஜா புயலின் தாக்கத்தால் ஈடு செய்ய மக்களுக்கு உதவி செய்ய சிவகாசியிலிருந்து சென்றது ஒரு சிறிய படை! சிவகாசியின் இனி ஒரு விதி செய்வோம் என்று 13 நண்பர்களுடன் இணைந்து சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை நேரடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்! மேலும் சிவகாசிக்கு அருகில் உள்ள பெரிய பொட்டல் பட்டி ஊரில் சென்று சுமார் 3000 விதைப்பந்துகள் பள்ளி மாணவர்களிடம் கொடுத்து தூவினர்! சுமார் 40க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு ரத்த உதவி செய்தும், இரண்டு மாணவிகள் கல்லூரி படிப்பைத் தொடர கல்வி உதவித் தொகை கொடுத்தும், குடும்ப சூழ்நிலையின் காரணமாக மருத்துவ உதவி இல்லாத இளைஞர்களுக்கு மருத்துவ உதவி செய்தும் பல்வேறு நலத்திட்டங்கள் செய்து தங்களுடைய படையை உயர்த்தினர்! அதே நேரத்தில் மறுபக்கம் பெண்கள் முன்னேறுவதற்காக இலவச தையல் பயிற்சி யும், வயதானவர்களுக்கு சிறப்புமிக்க தங்குமிட வசதி செய்து முதியோர் காப்பகம் அமைத்து பெண்களுக்கும் காப்பகம் அமைத்து சிறப்பு செய்து கொண்டிருந்தார் சிவபிரான்! இவர் விவேகானந்தர் பவுண்டேஷன் என்ற பெயரில் நலத்திட்ட உதவிகள் செய்து வந்தார்!

சிவகாசியின் இனி ஒரு விதி செய்வோம் குழு சார்பில் காளீஸ்வரனும், விவேகானந்தர் பவுண்டேஷன் குழு சார்பில் சிவபிரானும் இணைந்து ஆரம்பித்த ஒரு சிறிய முயற்சிதான், இந்த RCE - The Right Club for Education


மாணவர்களுக்கு புதிய கல்வித் திட்டமும் சமச்சீர் கல்வித் திட்டமும் தங்களுக்கு முன்னால் பயின்ற மாணவர்கள் மட்டுமே சிறப்பாக சொல்லித்தர முடியும் என்பதால், இந்த பள்ளியை முன்னாள் மாணவர்களை நடத்துகின்றனர்! சிறப்பு கல்வி வகுப்புகள், கராத்தே வகுப்புகள், ஜூடோ வகுப்புக்கள், நடன வகுப்புகள், இசை வகுப்புக்கள், ஹிந்தி வகுப்புகள், ஓவிய வகுப்புகள், கலை வகுப்புகள் என அனைத்து வகுப்புகளும் மாதம் ஐந்து ரூபாய் கட்டணத்தோடு ஆரம்பித்தனர்! முதலில் மூன்று மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி தற்பொழுது 150 மாணவர்களுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் புத்தாண்டு நிகழ்ச்சிகள், பொங்கல் நிகழ்ச்சிகளும், அனைத்து மாணவர்களுக்கும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருகிறது இந்த அமைப்பு!